தேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?